வியாழன், 2 ஜூலை, 2015

சங்கல்பம்மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்த2ம் …………. ப்ரஸாத3 சித்த்யர்த்த2ம்… (இங்கு எந்த தெய்வத்துக்கு பூஜை செய்யப்போகிறோமோ அந்த தெய்வத்தின் பெயரை சொல்லிக்கொள்ளவும்-ம் ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ப்ரஸாதசித்தயர்த்த2ம்இஷ்ட காம்யார்த்த2 சித்யர்த்த2ம் …………. ஆராதனம் கரிஷ்யே. (முன்போல உ-ம்ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ஆராதனம் கரிஷ்யே.) யாவத் சக்தி த்3யான ஆவாஹனாதி ஷோடோபசார பூஜாம் கரிஷ்யே.
அக்ஷதை நீரை கீழே விட்டுவிடவும்.

/மன்வாதி 14
யுகாதிகள் 4
பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12//

யுகாதி:

வைகாசி, வளர்பிறை மூன்றாம் நாள் (த்ருதீயை), - கிருத யுகம்ஆரம்பித்தது.
கார்த்திகை- வளர்பிறை ஒன்பதாம் நாள் (நவமீ) -த்ரேதா யுகம் ஆரம்பித்தது.
பாத்ரபத (புரட்டாசி ) தேய்பிறை பதிமூன்றாம் நாள் (த்ரயோதசீ) - த்வாபர யுகம் ஆரம்பித்தது.
மாக (மாசி) பௌர்ணமி - கலி யுகம் ஆரம்பித்தது.

{சரியா சொல்ல போனா சந்திரனை அடிப்படையா கொண்ட மாதங்களில் கணக்கு. அதாவது தெலுங்கு வருஷ மாத கணக்கு}

இவை யுகாதி.

மன்வாதி = மந்வந்தரங்கள் ஆரம்பித்த தினங்கள்.

[சுக்ல -வளர்பிறை; க்ருஷ்ண – தேய் பிறை. தெரியும்தானே?]
ஆச்வயுஜ (ஐப்பசி) சுக்ல 9
கார்த்திக சுக்ல 12
சைத்ர (சித்திரை) சுக்ல 3
பாத்ரபத (புரட்டாசி) சுக்ல 3
பால்குன (பங்குனி) பௌர்ணமீ
புஷ்ய (தை) சுக்ல 11
ஆஷாட (ஆடி) சுக்ல 10
மாக (மாசி) சுக்ல 7
சிராவண (ஆவணி) க்ருஷ்ண 8
ஆஷாட (ஆடி) பௌர்ணமீ
கார்த்திக பௌர்ணமீ
பால்குன (பங்குனி) பௌர்ணமீ
சைத்ர (சித்திரை) பௌர்ணமீ
ஜ்யேஷ்ட (ஆனி) பௌர்ணமீ

இதெல்லாம் மன்வாதிகள்.

இந்த யுகாதி மன்வாதிகளில் செய்கிற சிராத்தங்கள் 2000 வருஷங்கள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் தருமாம்.

//பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12. இது கொஞ்சம் இல்லை, நல்லாவே புரியலை, ஆனால் தேய் பிறை அஷ்டமி, முன் திதி, பின் திதியில் செய்யறவங்களைப் பார்த்ததுண்டு. காரணம் தெரியாது. அப்போ ரொம்பச் சின்ன வயசுங்கறதாலே இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. //

அதுவேதான்.

<<( இதெல்லாம் ஹேமந்த சிசிர ருதுக்கள்ல வருகிற க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகள், அதன் முன் திதி, பின் திதி. )>>

இப்படி சொல்லி இருக்கேன்.
ஆ, புரியுது.
க்ருஷ்ணபக்ஷம்ன்னு சொல்கிறதுக்கு பதில் தேய்பிறைன்னு சொல்லி இருக்கலாம். இதுதானே சொல்ல வந்தீங்க? அப்புறம் மாசங்களும் மார்கழி, தை, மாசி, பங்குனி ன்னு சொல்லி இருக்கலாம். ரைட்!

//மஹாலய பக்ஷம் 15//
இது ஓகே, நல்லாவே தெரியும்,

:-)

//வ்யதீபாதம் 12
வைத்ருதி 12//

இது புரியலை! //

இதை விளக்குவது கொஞ்சம் கஷ்டம். (ஏன்னா தெரியாதுன்னு அர்த்தம்! :-)
பஞ்சாங்கத்தை பாத்தால் இதை குறிச்சு இருப்பாங்க.
7-7-2008 அன்னிக்கு வ்யதீ. சிரா ன்னு போட்டு இருக்கும். அது வ்யதீபாத சிராத்தம்.17-7-2008 வை.சிரா. இது வைத்ருதி சிராத்த நாள். திருப்பி 2-8-2008 வ்யதீபாதம்.ள்
--
சேர்ப்பு:
சூரிய கதி (நகர்வு) சந்திர கதி இரண்டையும் ஸ்பிரிங்க் ஈக்வினாக்ஸ் லேந்து கணக்கிட்டு இரண்டின் லாங்ஜிட்யூடையும் கூட்டி கூட்டுத்தொகை 180 டிகிரியா இல்லை 360 டிகிரியா என்பதை பொருத்து வ்யதீபாதம், வைத்ருதி இரண்டும் கணக்கு போடறாங்க.
அப்பாடா! ரொம்பவே தெளிவாயிடுச்சு!
:-)))))))

சனி, 27 ஜூன், 2015

                                        அருள்மிகு                                                   பிரம்மபுரீஸ்வரர்                                            திருக்கோயில்[Gal1][Gal1]


தல சிறப்பு:
   
                            பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.
இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.

குரு பரிகார தலம்:
 அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

ஏழாம் தேதி பிறந்தவரா? ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.

SRI RANGAM KOVIL RAJA GOPURAM

Image result for srirangam temple picturesImage result for srirangam temple picturesImage result for srirangam temple picturesImage result for srirangam temple picturesImage result for srirangam temple picturesImage result for srirangam temple pictures